போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.;
கொள்ளிடம் டோல்கேட்:
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள ராஜகோபால் நகரை சேர்ந்த ராமநாதனின் மகன் பாலமுருகன்(வயது 33). இவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று தூங்கினார். மறுநாள் காலையில் அவர் எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.