தொழிலாளி வீட்டில் நகை- பணம் திருட்டு
தொழிலாளி வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
விழுப்புரம் கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி அஞ்சலி (வயது 36), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த இரும்பு பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 கிராம் எடையுள்ள கம்மல், ஜிமிக்கி ஆகியவை திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்