பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடி சென்றனர்;

Update:2022-05-24 00:22 IST

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பரை அடுத்த மேல்கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம். இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

இரவு வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நாகரத்தினம் உமராபாத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்