ஓட்டலில் பணம்,பொருட்கள் திருட்டு

ஏர்வாடி அருகே ஓட்டலில் கதவை உடைத்து பணம்,பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.;

Update:2023-05-17 01:24 IST

ஏர்வாடி:

திருக்குறுங்குடி மகிழடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 55). இவர் ராஜபுதூர் ரோட்டில் ஓட்டல் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவில் வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நள்ளிரவில் மர்மநபர்கள் ஓட்டல் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த கியாஸ் அடுப்பு, சிகரெட், பீடி, பால் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.2,850 ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

நேற்று காலை வழக்கம் போல் ஓட்டலை திறக்க சென்ற மகாராஜன், திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்