தொழில் அதிபர் வீட்டில் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update:2022-08-13 20:24 IST

அன்னூர்

கோவையை அடுத்த அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது40). தொழில் அதிபர். இவர் அச்சம்பாளையத்தில் காஸ்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.

தனது நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக முருகன் நேற்று வங்கியில் இருந்து ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்தை எடுத்து வீட்டில் பிரோவில் வைத்து விட்டு சென் றார்.

இதையடுத்து கவிதா வீட்டை பூட்டி விட்டு மகன் படிக்கும் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டத்திற்கு சென்றார்.

அவர், பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்