வால்பாறை நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது

குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வாங்க ஆர்வம் காட்டிய மக்களால், வால்பாறை நகரில் கூட்டம் அலைமோதியது.;

Update:2023-06-12 00:45 IST

வால்பாறை

குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வாங்க ஆர்வம் காட்டிய மக்களால், வால்பாறை நகரில் கூட்டம் அலைமோதியது.

சந்தை நாள்

வால்பாறை பகுதியை சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட் பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தங்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க சந்தை நாளான ஞாயிற்றுக்கிழமை நகர்ப்பகுதிக்கு வந்து செல்வார்கள்.

இதற்கிடையில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று(திங்கட்கிழமை) முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி தங்களது குழந்தைகளுக்கு தேவையான நோட்டு-புத்தகங்கள், புத்தகப்பைகள் போன்ற கல்வி உபகரண பொருட்களை வாங்க நேற்று எஸ்டேட் பகுதி மக்கள் அதிகளவில் வால்பாறை நகரில் குவிந்தனர்.

லேசான மழை

இதன் காரணமாக வால்பாறை மெயின் ரோடு மற்றும் நகராட்சி மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கல்வி உபகரணங்கள் வாங்க பெரும்பாலும் ஆர்வம் காட்டியதை காண முடிந்தது. இது தவிர கோடை விடுமுறையின் இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவிலான சுற்றுலா பயணிகளும் வால்பாறைக்கு வந்திருந்ததால் நகர் பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. இதற்கிடையில் விட்டு விட்டு லேசான மழையும் பெய்து வந்தது. இந்த இதமான காலநிலையை அவர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்