அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் அருகே மரியம்மாள் குளத்தில் உள்ள காணிக்கை மாதா கிறிஸ்துவ ஆலய திருவிழா நடந்தது. விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 7 நாட்கள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து காணிக்கை மாதா, மிக்கேல் சமனேஷ், சப்பரங்கள் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப் பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் நடந்தது. மக்கள் மெழுகுவர்த்தி, பத்தி, உப்பு, மிளகு காணிக்கையாக செலுத் தினர். சுற்றுவட்டாரங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.