சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம்; மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

Update: 2024-04-20 04:18 GMT

சென்னை,

சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளையும் சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "லயோலா கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 156 கேமராக்கள் கொண்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை" என்றார்.

வாக்குப்பதிவு மந்தமானது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், " தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஆனால் நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாக இருந்துள்ளது." என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்