சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது;
திருவெண்காடு:
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மூன்று குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் புனித நீராடி இறைவனை வழிபட்டால் குழந்தை பிறக்கும், பல்வேறு செல்வங்களை பெறலாம் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அஸ்திர தேவருக்கு சிறப்பு வழிபாடு மற்றும் தீர்த்தவாரி நடந்தது. இதனையடுத்து அஸ்திரதேவர் மூன்று குளங்களிலும் எழுந்தருளினார். தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் புனித நீராடினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் ஆகியோர் செய்தனர்.