முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார். அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே 3 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அவரது உடலில் கொரோனா பாதிப்பின் அளவும் குறைவாகவே இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.