டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு

ஆலங்குளத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.;

Update:2023-09-11 00:15 IST

ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் உள்ள அரசு நூலகத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு துறை அரசு பணிகளில் சேர உள்ளவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஷீலா, வட்டார நூலகர் பழனிஸ்வரன், நூலக வாசகர்கள் வட்ட தலைவர் தங்கச்செல்வம், மனவளக்கலை மன்ற பேராசிரியர் சிவஞானம், செங்கோட்டை நூலக வாசகர்கள், வட்ட நூலகர் ராமசாமி மற்றும் ஆலங்குளம் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்