மகளிர் உரிமைத்தொகை பெற2 நாட்களில் 49 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன

பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் நடந்த முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை பெற 2 நாட்களில் 49 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிந்தன.

Update: 2023-07-25 18:45 GMT

தேனி மாவட்டத்தில் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் நடக்கிறது. முதல் கட்டமாக பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக விண்ணப்ப படிவம் மற்றும் முகாம் நடக்கும் இடம், நாள், நேரம் குறித்த விவரங்கள் அடங்கிய டோக்கன் வழங்கும் பணி நடந்தது. அதன்படி, 1 லட்சத்து 57 ஆயிரத்து 209 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

இதையடுத்து முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் பெரியகுளம், உத்தமபாளையம் தாலுகாக்களில் 259 இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 19 ஆயிரத்து 952 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. 2-வது நாளான நேற்று 29 ஆயிரத்து 44 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 2 நாட்களில் மொத்தம் 48 ஆயிரத்து 996 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்