அரசு பள்ளிக்கு புகையிலை இல்லா கல்வி நிறுவனம் சான்று

அரசு பள்ளிக்கு புகையிலை இல்லா கல்வி நிறுவனம் சான்று வழங்கப்பட்டது.

Update: 2023-08-04 17:53 GMT

 தமிழக அரசு புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு புகையிலையினால் ஏற்படும் பல்வேறு நோய்களை விளக்கி அதனை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு செய்வதோடு அனைத்து கல்வி நிறுவனங்களும் புகையிலை இல்லா கல்வி நிறுவனம் என்ற சான்றிதழை பெற உத்தரவிட்டது.

அதற்கு கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுத்து அனைத்து நிறுவனங்களுக்கும் ஆய்வறிக்கை செய்து அச்சான்றினை வழங்க உத்தரவிட்டார். அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்யப்பட்டு அதற்குரிய புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என்ற பதாகைகள் 3 வைக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அவ்வாறு பயன்படுத்தினால் தலைமையாசிரியரால் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு அதிகாரத்தைச் சட்டத்தில் வழங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலம் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை ஆய்வு செய்யப்பட்டு அரசு வழங்கிய புகையிலை இல்லா கல்வி நிறுவனம் சான்றினை சுகாதார ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையாசிரியர் சாகுல் அமீதுவிடம் பள்ளியில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்