வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தொடர் மழையால் வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.;

Update:2022-07-13 22:48 IST

வால்பாறை

தொடர் மழையால் வால்பாறையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டு உள்ளது.

பருவமழை தீவிரம்

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து மதகுகள் மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் அதிகாலை முதல் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இரவு 8 மணியளவில் மீண்டும் சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியது.

விடுமுறை

இதனால் இரவு 8.15 மணிக்கு மீண்டும் சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் கேரளாவிற்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வால்பாறை பகுதி முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நாளை(வியாழக்கிழமை) ஒரு நாள் மட்டும் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்