நாளை மின் நிறுத்தம்

சாக்கோட்டை திருநரையூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-06-07 21:33 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம், சாக்கோட்டை துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருநறையூர் பீடர் மற்றும் ராஜன் தோட்டம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலக்காவேரி பீடரில் சாலை வேலைகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திருநறையூர் பீடர் வாயிலாக மின்வினியோகம் பெறும் சாக்கோட்டை, கிருஷ்ணாபுரம், அழகாபுத்தூர், கருவிளச்சேரி, திருநறையூர் மற்றும் மேலக்காவேரி பீடர் வாயிலாக மின்வினியோகம் பெறும் பெரும்பாண்டி, காமராஜ்நகர், பழனிச்சாமிநகர் ஆட்டோநகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்