வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-11-14 17:50 IST
வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 26). இவர் ஆம்பூரில் தோல் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு வயதில் குழந்தை உள்ளது. தோல் வியாபாரத்தில் தினேஷ் குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் அவரது மனைவி சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தினேஷ்குமார் மாடியில்உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷ்குமார் உடலை மீட்டு பிேரத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்