திருச்செந்தூர் கடற்கரையில் மண் அரிப்பு
கடற்கரையில் சுமார் 5 அடி தூரத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.;
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடிவிட்டு, சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் எழுந்து கரைப்பகுதியை பலமாக மோதின. இதனால் கடற்கரையில் சுமார் 5 அடி தூரத்துக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் நேற்று காலையில் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்திருந்த பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடினர். பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.