பிளஸ்-2 மாணவிக்கு முத்தம் கொடுத்து, படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்ததுடன் பிளஸ்-2 மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.;

Update:2025-12-14 00:22 IST

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியின் தாயார், அரசு துறையில் வேலைபார்த்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் மாரிமுத்து. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி உள்ளார். இந்நிலையில் சிறுமியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து உள்ளார்.

மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் நேரம்பார்த்து, அவரது வீட்டுக்கு மாரிமுத்து சென்றுள்ளார். சம்பவத்தன்று வேலை முடிந்து மாணவியின் தாய் வீட்டுக்கு வந்தபோது, அங்கு மாரிமுத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என் வீட்டுக்கு ஏன் வந்தாய் என்று கேட்டு மாரிமுத்துவிடம் தகராறு செய்தார்.

பின்னர் மகளிடம் விசாரித்தபோது ஒரு ஆண்டாக காதலிப்பதாக கூறி மாரிமுத்து பின்தொடார்ந்து வந்து தொல்லை கொடுத்ததாகவும், ஒரு நாள் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன், அதை ரகசியமாக படம் எடுத்து மிரட்டி வருகிறார் என்றும் கூறி மாணவி அழுதுள்ளார். இதை தொடர்ந்து மாணவியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் ேபாலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாரிமுத்துவை கைது செய்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்