பரமத்திவேலூர் காவிரி பாலத்தில்கிரேன் மூலம் பெயர் பலகை அமைக்கும் பணியால் போக்குவரத்து பாதிப்புபொதுமக்கள் அவதி

Update: 2023-05-31 19:00 GMT

பரமத்திவேலூர்:

கன்னியாகுமரி- காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் பரமத்திவேலூரில் காவிரி ஆற்றின் குறுக்கே இரட்டை பாலம் உள்ளது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியும், பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே கிரேன் மூலம் பிரமாண்ட இரும்பு பெயர் பலகை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் புதிய பாலம் அருகே பஸ் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால் கரூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

பின்னர் கிரேன் ஓரமாக நிறுத்தப்பட்டு ஸ்தம்பித்து நின்ற வாகனங்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து கிரேன் எந்திரம் நடுவில் நிறுத்தி பெயர் பலகை வைக்கும் பணி நடந்தது. இதனால் மீண்டும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள், குழந்தைகளுடன் பயணம் செய்த பெண்கள் சிரமம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்