பெருந்துறையில் போக்குவரத்து விதிமீறியதாக 4,428 பேர் மீது வழக்குப்பதிவு
பெருந்துறையில் போக்குவரத்து விதிமீறியதாக 4,428 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.;
பெருந்துறை
பெருந்துறை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில், போலீசார் கடந்த மாதம் பெருந்துறை நகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினார்கள்.
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டதாக 4,428 பேர் பிடிபட்டனர். இவைகளில் 845 வாகனங்களுக்கு சம்பவ இடத்திலேயே அபராதமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 100 விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,583 வாகனங்கள் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.