அரகண்டநல்லூர் அருகே ஓசூரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை வாலிபர் கைது

அரகண்டநல்லூர் அருகே ஓசூரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.;

Update:2022-07-13 22:45 IST


திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் போலீசாருக்கு, அந்திலி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அந்திலி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (வயது 21) என்பதும், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, 40 கிராம் கஞ்சா இருந்தது.

மேலும், விசாரணையில் அவா் ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும், அங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்