கூழாங்கற்கள் கடத்தல்

கூழாங்கற்கள் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

Update: 2022-08-05 17:33 GMT

உளுந்தூர்பேட்டை

விழுப்புரம் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் அருள் முருகன் தலைமையில் அதிகாரிகள் உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை அவர்கள் வழிமறித்தனர். ஆனால் அதிகாரிகளை கண்டதும் லாரியை நடுவழியில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

பின்னர் லாரியை சோதனை செய்தபோது கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து உதவி புவியியலாளர் அருள் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்