ரெயிலில் பாதுகாப்பு பயண பிரசாரம்

ரெயிலில் பாதுகாப்பு பயண பிரசாரம் செய்தார்.

Update: 2022-07-07 18:13 GMT

ராமேசுவரம், 

மதுரையில் இருந்து கடந்த 3-ந்் தேதி ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரசார பயணமாக புறப்பட்டனர். திருமங்கலம், விருதுநகர், ராஜபாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு திருநெல்வேலி சென்றனர். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி சென்றுவிட்டு அங்கு பிரசார பயணம் முடித்து விட்டு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரம், மண்டபம், பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏற வந்த பயணிகளிடம் ரெயிலில் பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ததோடு ரெயிலில் சந்தேகப்படும்படியான நபர்களையோ தடை செய்யப்பட்ட பொருட்கள் யாரேனும் ஏற்றி சென்றாலோ, குழந்தைகளை கடத்தி சென்றாலோ உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் இலவச தொலைபேசி எண்ணான 139-ல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை புறப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இருசக்கர வாகன பிரசாரத்தை ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அரவிந்தகுமார் தொடங்கி வைத்தார். அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்