ஆசிரியர்களுக்கு பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2023-04-28 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கான 3 நாள் பயிற்சி முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை வகித்து பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆரம்ப கல்வி குழந்தைகளுக்கு மனதில் எளிதாக பதியக்கூடியது. ஆகவே பொது அறிவு, உடற்பயிற்சி, ஆற்றலுடன் கூடிய கருத்து என இவை மூன்றையும் ஒருங்கிணைத்து பாடலாகவும், நடனமாகவும், நாட்டுப்புற இசை மற்றும் குழு நாடகம் மூலமாகவும் கல்வியை கற்பிக்க எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் கல்வி கற்பிக்க ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி பட்டறையில் மாவட்டம் முழுவதும் 11 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 2000 ஆசிரியர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் புனிதம், உதவி பேராசிரியர்கள் டேவிட் அந்தோணி, பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் கர்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன், ரமேஷ், கண்ணன், ராமநாதன், முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்