அழகப்பா கல்லூரியில் பயிற்சி பட்டறை

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது;

Update:2023-03-04 00:15 IST

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி தலைமை தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் லதா வரவேற்றார். பொறுப்பு முதல்வர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக இ.டி.ஐ. இயக்குனர் வேதிராஜன் மற்றும் இ.டி.ஐ. ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். நிகழ்ச்சியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி 3-வது ஆண்டு வணிகவியல் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர் ரமேஷ் செய்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்