அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.;

Update:2022-09-08 00:08 IST

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவினை மாங்குடி அரசு உயர் நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் கண்ணன் தொடங்கி வைத்து மாணவர்களிடையே மரம் வளர்ப்பின் அவசியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முறை பற்றி பேசினார். மரக்கன்று நடும் நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் 6-ம் வகுப்பு மாணவி துளசி பிரியா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்