மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

Update: 2023-06-28 20:14 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள கல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா தலைமை தாங்கினார். காவியா வரவேற்றார். ஊர் நாட்டாமை ராமகிருஷ்ணன், சமூக ஆர்வலர் கரிசல் கருப்பசாமி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மாரிக்கண்ணன், முனியாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பள்ளி இடைநிற்றல் குழந்தைகளையும், 5 வயது முடிந்த சிறுவர், சிறுமிகளையும் பள்ளியில் சேர்க்க உதவி செய்வது, உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குவது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நடுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சமூக ஆர்வலர் மாசிலாமணி நன்றி கூறினார். பின்னர் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்