தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து
கடையநல்லூரில் தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.;
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கேரளா மாநிலம் கொல்லத்திற்கு புறப்பட்டது. லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜூ (வயது 40) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் கடையநல்லூர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்த போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது. இதனால் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். எனினும் இந்த விபத்தில் லாரி டிரைவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.