அயோத்தியாப்பட்டணம் அருகேபஸ் மீது லாரி மோதல்; 20 பேர் படுகாயம்

Update:2023-08-05 01:42 IST

அயோத்தியாப்பட்டணம் 

அயோத்தியாப்பட்டணம் அருகே பஸ் மீது லாரி மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ் மீது லாரி மோதல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து நேற்று இரவு 7.20 மணி அளவில் சேலம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. ராமலிங்கபுரம் அருகே வந்து கொண்டிருந்த டவுன் பஸ் மீது பின்னால் வந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறிய டவுன் பஸ், அருகில் இருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டவுன் பஸ்சில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் காயம் அடைந்த பயணிகளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு உதவி செய்தனர்.இந்த விபத்தால் அந்த பகுதியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்