டேன்டீ தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு

பந்தலூர் அருகே டேன்டீ தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2023-10-20 19:15 GMT


பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், சேரங்கோடு டேன்டீ ரேஞ்ச் எண்.1 சேவியர் மட்டம் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மைய ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை தாங்கினார். நர்சு கவுதமி காசநோய் குறித்து விளக்கம் அளித்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் அயோடின் கலந்த உப்பின் அவசியம், ஊட்டச்சத்து குறித்து விளக்கினார். ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் குறித்து பேசினார். முகாமில் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்