தூத்துக்குடி: வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - உப்பு உற்பத்தி தீவிரம்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

Update: 2024-04-26 20:26 GMT

தூத்துக்குடி,


தூத்துக்குடியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தருவைக்குளம், வேப்பலோடை, ஆறுமுகநேரி, முல்லைக்காடு, பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் வழக்கமாக ஜனவரி மாதம் துவங்க வேண்டிய உப்பு உற்பத்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் துவங்கியது. உப்பு உற்பத்தி துவங்கிய போதும், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்ததால் மீண்டும் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு உற்பத்தி செய்யப்பட்ட உப்பு ஒரு டன் 4 ஆயிரம் ரூபாய் வரையும், தற்போது உற்பத்தி செய்யப்படும் புதிய உப்பு டன் 2 ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் உப்பு உற்பத்தி தாமதமாக துவங்கியதால், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்