கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக மீன்பிடித்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள்

வாலிநோக்கம் கடல் பகுதியில் கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்தனர்.

Update: 2022-12-15 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கம் கடல் பகுதியில் நேற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக தூத்துக்குடியை சேர்ந்த 3 விசைப்படகுகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து கரைவலையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த கடலோர போலீசார் கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக மீன்பிடித்த தூத்துக்குடி சேர்ந்த 3 படகுகளையும் அதிலிருந்து மீனவர்களையும் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது குறித்து வாலிநோக்கம் மீனவர் ஜமால் முகமது கூறியதாவது:- வாலிநோக்கம் கடல் பகுதியை கரைவலை மீன்பிடிப்புக்கு இடையூறாக தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த மீனவர்கள் கரையோரத்தில் வந்து கடல் பகுதியில் மீன் பிடித்து வருவது தொடர்ச்சியாகவே நடைபெற்று வருகின்றது. இது குறித்து மீன் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் தான். இது குறித்து ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் மீனவர் குறைதீர் கூட்டத்திலும் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்