நயினார்கோவில் ஒன்றிய குழு கூட்டம்

நயினார்கோவில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-07-17 00:15 IST

நயினார்கோவில், 

பரமக்குடி தாலுகா, நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் வினிதா தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அதிகாரி திருநாவுக்கரசு, ஒன்றிய துணைத்தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கடந்தகால செலவினங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

ஒன்றியக்குழு தலைவர் வினிதா பேசுகையில், ஒன்றிய கவுன்சிலர்களின் குறைகளை கேட்டு, பொதுமக்களின் தேவைகள் சரி செய்யப்பட்டு வருகிறது என்றார். இதில், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் இளவரசி மணிமன்னன், ஆனந்திகரிகாலன், நாகநாதன், ரம்யா, பிரேமா, கவிதா, மணிசேகரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்