சென்னை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை நீட்டிப்பு...!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-31 08:27 GMT

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்