தண்ணீரில் மிதந்து யோகா செய்து அசத்திய மாணவர்

கீழக்கரையில் தண்ணீரில் மிதந்து யோகா செய்து மாணவர் அசத்தினார்.

Update: 2022-06-21 17:52 GMT

கீழக்கரை,

கீழக்கரை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இம்பாலா சுல்தான். இவருடைய மகன் இன்சாப் முகமது (வயது 11). கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தண்ணீரில் அதிக நேரம் மிதந்து ரெக்கார்டு புக் ஆப் இந்தியா புத்தகத்தில் இடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கேரளாவைச் சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை புரிந்தார். அதனை முறியடிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு மணிநேரம் 11 நிமிடம் 14 வினாடிகள் யோகா நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டை முறியடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.நேற்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீண்ட நேரம் தண்ணீரில் மிதந்து மாணவன் யோகாசனங்களை செய்து காட்டி பார்வையாளர்களை அசத்தினார். மாணவனை கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் மற்றும் வடக்குதெரு நாசா சமூக நல அமைப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்