வா.சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
வா.சந்திராபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பணியாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வதம்பச்சேரி, வாரப்பட்டி, ஜல்லிபட்டி, பூராண்டாம்பாளையம், குமாரபாளையம், கள்ளப்பாளையம் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இங்கு சுமார் 90 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வா.சந்திராபுரம் மற்றும் சின்ன வதம்பச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சுகாதார பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வா.சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. இதற்கு தலைமை தாங்கி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா பேசும்போது, டெங்கு மற்றும் உண்ணிகளால் ஏற்படும் ஸ்கரப்டைபஸ் நோயால் ஏற்படும் பாதிப்பு, மலேரியா காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார். இதில் அரசு டாக்டர்கள் சுந்தர், கிருஷ்ண பிரபு, விஜய், சூர்யா, சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திக் குமார், அப்துல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ் கலந்துகொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.