திருமயத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

திருமயத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.;

Update:2023-04-24 00:37 IST

திருமயத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டன. இதில் காளைகளை அடக்க 11 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குழுவினர் களத்தில் இறக்கி விடப்பட்டனர். களத்தில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு மடக்கி பிடித்தனர். இதில் வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்