தேசிய சராசரியைத் தாண்டி தமிழ்நாடு சாதனை - மாநில திட்டக் குழு அளித்த ஆய்வறிக்கையில் தகவல்

வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக 4.8 சதவீதமாக ஆக உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-06 09:08 IST

சென்னை,

சுகாதாரம், கல்வி, குடிநீர், மின்சாரம் வினியோகம், வேலை வாய்ப்பு ஆகிய நிலையான வளர்ச்சிக்கான குறியீடுகளில் தேசிய சராசரியை தமிழ்நாடு விஞ்சியுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநில திட்டக்குழு அளித்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 47சதவீதம் ஆக உள்ளது.

* ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தேவைப்படுவோருக்கு 100 சதவீதம் வேலை வழங்கப்படுகிறது.

* கிராமப் புறங்களில் உள்ள வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் 81.87 சதவீதம் ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம்

5 50 சதவீதத்திற்க்கு மேல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுடன் 100 சதவீத வீடுகளுக்கு மின் இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக 4.8 சதவீதமாக ஆக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்