பராமரிப்பு பணி: ஈரோடு -செங்கோட்டை ரெயில் பகுதியாக ரத்து

கரூர் முதல் ஈரோடு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.;

Update:2026-01-06 08:42 IST

ஈரோடு,

ஈரோடு - கரூர் இடையே சாவடிப்பாளையம், ஊஞ்சலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் 6-ந் தேதி, 13-ந் தேதி, 17-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சி- ஈரோடு, செங்கோட்டை- ஈரோடு, ஈரோடு -செங்கோட்டை ஆகிய ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதில் திருச்சி - ஈரோடு (வண்டி எண்.56809) ரெயில் காலை 7 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படுகிறது. அதாவது கரூர் முதல் ஈரோடு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் செங்கோட்டை - ஈரோடு (16846) ரெயில் அதிகாலை 5.10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படும். அதாவது கரூர் முதல் ஈரோடு வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. தண்டவாள பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக கரூரில் இருந்து ஈரோடு வரை மீண்டும் இயக்கப்படும். மேலும் ஈரோடு - செங்கோட்டை (16845) ரெயில் ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக கரூரில் இருந்து 3.05 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு சென்றடையும். ஈரோடு- கரூர் பகுதியில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்