பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.;

Update:2023-05-31 00:04 IST

அன்னவாசல் மேட்டுத்தெருவில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடந்தது. அதனை தொடர்ந்து பொங்கல் விழா நேற்று நடந்தது. முன்னதாக பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வாசலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிடா வெட்டு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்