போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு பொதட்டூர்பேட்டை போலீஸ்நிலையம் பின்புறம் வீணாக கிடக்கும் வாகனங்கள்; ஏலத்தில் விட பொதுமக்கள் கோரிக்கை

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு பொதட்டூர்பேட்டை போலீஸ்நிலையம் பின்புறம் வீணாக கிடக்கும் வாகனங்களை ஏலத்தில் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-06 12:05 GMT

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை போலீஸ்நிலையம் ஊருக்கு சற்று தொலைவில் பொதட்டூர்பேட்டை துணை மின் நிலையம் எதிரே அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலையம் எல்லைக்குள் நடக்கும் சாலை விபத்துகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் நிறுத்தி வைத்துள்ளனர். இதில் ஏராளமான இருசக்கர வாகனங்களும், ஆட்டோ, டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டு பல நாட்களாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஏலத்தில்விட கோரிக்கை

இந்த வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் கிடப்பதால் துருப்பிடித்து வீணாகி பாழாகி வருகின்றன. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விட்டால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று இந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். மேலும் வாகனங்கள் வீணாவதால் யாருக்கு என்ன பயன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த வாகனங்கள் சற்று நல்ல நிலையில் இருக்கும்போது அவற்றை ஏலத்தில் விட்டால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆகவே அவற்றை ஏலத்தில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்