சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குடியரசு துணைத் தலைவர் மனைவி சாமி தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குடியரசு துணைத் தலைவர் மனைவி சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-10-22 18:45 GMT

சாமி தரிசனம்

இந்திய குடியரசு துணைத் தலைவராக ஜக்தீப் தன்கர் உள்ளார். அவருடைய மனைவி சுதேஷ் தன்கர். இவர் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் குமரி மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவரை நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் வரவேற்றார்.

அதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, நவக்கிரக மண்டபம், இசை தூண்கள், தாணுமாலயன் சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சன்னதி, ராஜகோபுரம் போன்றவற்றை தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் சுற்றுபிரகாரங்களையும், கோவில் சிற்பங்களையும் கண்டு ரசித்ததுடன் கோவிலின் வரலாறு குறித்தும் தெரிந்து கொண்டார். தொடர்ந்து கோவில் அலுவலக சிறப்பு விருந்தினர் பதிவேட்டில் கோவில் பெருமை குறித்து இந்திய குடியரசு துணை தலைவரின் மனைவி சுதேஷ் தன்கர் பதிவிட்டுள்ளார். கோவிலின் சிறப்பு குறித்து கோவில் பணியாளர் இந்தி மொழியில் மொழி பெயர்த்தளார். குடியரசுத் துணைத் தலைவரின் மனைவி வருகையை யொட்டி நேற்று சுசீந்திரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுசீந்திரத்தில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்