விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு

சீர்காழி அருகே விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு;

Update:2023-08-14 00:15 IST

திருவெண்காடு:

சீர்காழி அருகே காத்திருப்பு கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட காத்திருப்பு, காரமேடு, அண்ணன் கோவில், தேத்தாக்குடி, செம்பதிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடி செய்துள்ள 300 விவசாயிகளுக்கு உரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க தனி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் திருஞான சுந்தர் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உரங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்