ஆடியோ இல்லாமல் ஓடிய விக்ரம் திரைப்படம் - பணத்தை திரும்ப கேட்டு ரசிகர்கள் வாக்கு வாதம்...!

கோவில்பட்டியில் ஆடியோ இல்லாமல் ஓடிய விக்ரம் திரைப்படத்தால் ரசிகர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-06-04 19:28 IST


நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிவருகிறது. கோவில்பட்டியில் 3 திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இதில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் எதிரே உள்ள திரையரங்கில் விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது. இன்று காலை 11 மணி காட்சி ஓடிக் கொண்டு இருக்கும் போது, இடைவேளைக்கு பின்னர் திரையில் ஆடியோ இல்லமால் காட்சி மட்டும் ஓடியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகிகளிடம் வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் டிக்கெட் பணத்தினை திரும்ப தரும்படி கேட்டு உள்ளனர். ஆனால் திரையரங்கு நிர்வாகம் முழுமையான பணம் தரமுடியாது பாதி பணம் தான் தரமுடியும், இல்லையென்றால் ஆடியோ சரியாகும் வரை காத்திருந்து படத்தினை பார்த்து செல்லுங்கள் என்று கூறியதால் வாக்குவாதம் முற்றியது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திரையரங்கு நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், பணத்தினை திரும்ப தர நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அடுத்த காட்சி ஆடியோ சரிசெய்யப்பட்டு ஒளிபரப்பாகியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்