கிராம நிர்வாக அலுவலர் போக்சோவில் கைது

குடிபோதையில் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-03 00:34 IST

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடிபோதையில் தனது மகளிடத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்