தகட்டூரை தலைமை இடமாக கொண்டுவேதாரண்யம் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
தகட்டூரை தலைமை இடமாக கொண்டு வேதாரண்யம் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
வாய்மேடு அருகே தகட்டூர் ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரித்து தகட்டூரை தலைமை இடமாக கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் வாய்மேடு ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அறிவழகன் தீர்மானங்களை படித்தார். இதேபோல தாணிக்கோட்டகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.