கோவில் அருகே மின்தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

களக்காட்டில் கோவில் அருகே மின்தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-06-21 20:06 GMT

களக்காடு:

களக்காட்டில் கோவில் அருகே மின்தகன மேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கிராம மக்கள் எதிர்ப்பு

களக்காடு நகராட்சி சார்பில் களக்காடு மூனாற்று பிரிவு அருகே மின்தகன மேடை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு களக்காடு புதுத்தெரு, கக்கன்நகர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "நகராட்சி மின்தகன மேடை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே மாசான சுவாமி கோயிலும், கக்கன்நகர் குடியிருப்பும் உள்ளது. மேலும் அந்த வழியாகத்தான் கிராம மக்கள் கோவிலுக்கும், ஆற்றுக்கும் வந்து செல்கின்றனர்.

வேறு இடத்தில்

கோவிலுக்கு வரும் பாதையில் மின்தகன மேடை அமைக்கப்பட்டால் கோவிலுக்கு வருவதும், ஆற்றுக்கு செல்வதிலும் தடை ஏற்படும். மேலும் கோவில் திருவிழா காலங்களில் இடையூறாக இருக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடத்தில் மின்தகன மேடை அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பி உள்ளோம்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்