விதிமுறையை மீறிய மது பார்களுக்கு 'சீல்'

பொள்ளாச்சி பகுதியில் விதிமுறையை மீறிய மது பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;

Update:2022-07-19 21:45 IST

பொள்ளாச்சி

கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகில் உள்ள மதுபார்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் மணிமொழி தலைமையில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சமத்தூர், மார்க்கெட் ரோடு, வடசித்தூர், செட்டிபாளையம், ஜல்லிப்பட்டி ஆகிய பகுதிகளில் விதிமுறையை மீறி செயல்பட்ட மது பார்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. மதுபார்கள் மது பாட்டில்கள் விற்பனை செய்ய அனுமதி கிடையாது. இதையும் மீறி செயல்படும் பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்