72 நாட்களுக்கு பிறகு தலைமையகம் வருகை: "எங்கள் சாமி எடப்பாடி பழனிசாமி" தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை
கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்படி அந்த 'சீல்' அகற்றப்பட்டு, சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை அலுவலகத்திற்கு அலுவலகத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தி்ல எங்கள் சாமி எடப்பாடி பழனிச்சாமி என முகப்பு பேனர் வைத்து, அலுவலகம் வரவுள்ள கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சியினர் திரண்டனர்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லத்திலிருந்தே வரவேற்பு அளிக்கப்படது. 72 நாட்களுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அறைகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார்.
கரகாட்டம், செண்டை மேளம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியத்துடன் கூடிய தோரண வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.