விளாத்திகுளத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

விளாத்திகுளத்தில் வருவாய்துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2023-10-18 18:45 GMT

எட்டயபுரம்:

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க தாலுகா பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு விளாத்திகுளம் தாலுகா அலுவலக வளாக்தில் நடந்தது கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் செந்தூர் ராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானராஜ் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் வளர்ச்சி பற்றி நில எடுப்பு தாசில்தார் சேதுராமன் பேசினார். மாவட்ட துணை தலைவர் சுகுணா உட்பட தாலுகா அலுவலக பணியாளர்கள் நில எடுப்பு அலுவலகப் பணியாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் வட்டக்கிளைத் தலைவராக மாரிமுத்து, செயலாளராக ராஜ், துணைத்தலைவராக மலையாண்டி, இணை செயலாளராக கோபாலகிருஷ்ணன், பொருளாளராக பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக ராணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க இணை செயலாளர் பாலமுருகன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்